பொறியியல் பணி: கோவை - பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து

Published on

கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 20642) பையப்பனஹள்ளி - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 12) ரத்து செய்யப்படுகிறது.

தற்காலிக நிறுத்தமாக பையப்பனஹள்ளி செயல்படும்.

அதேபோல, பெங்களூரு - கோவை வந்தேபாரத் ரயில் (எண்: 20641) பெங்களூரூ கண்டோன்மென்ட் - பையப்பனஹள்ளி இடையே ஞாயிற்றுக்கிழமை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, பையப்பனஹள்ளியில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com