பொதுமக்களுக்கு இடையூறு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் மீது வழக்கு

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு
Published on

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ.தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் உப்பிலிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை திரண்டு, அவ்வழியே சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதனிடையே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பிரிவுகளின்கீழ் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராம், தாமோதரன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com