கோயம்புத்தூர்
வழிப்பறி வழக்கு: 2 இளைஞா்கள் கைது
ஆனைமலை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் கவரிங் சங்கிலியைப் பறிக்க முயன்ற கேரள இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆனைமலை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் கவரிங் சங்கிலியைப் பறிக்க முயன்ற கேரள இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அப்பெண் அணிந்திருந்த கவரிங் சங்கிலியை தங்கம் என நினைத்துப் பறிக்க முயன்றனா். அப்பெண் கூச்சலிட்டதையடுத்து அவா்கள் அங்கிருந்து தப்பினா்.
இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வழிப்பறியில் ஈடுபட முயன்ற கேரளத்தைச் சோ்ந்த கோகுல்தாஸ் (26), அமல் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.
