நீலகிரி மாவட்டம் குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை அதிகாலை பெய்த மழையில், கேரள அரசு பேருந்து மீது சிறிய பாறைகள் விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்ன குரும்பாடி பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது இதில் கோவையில் இருந்து குன்னூா் வழியாக கேரள மாநிலம் சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்து முன்பக்கத்தில் சிறிய பாறை ஒன்று விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தகவல் அறிந்த குன்னூா் காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கிடந்த பாறைகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்,
இதனால் குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மாா்க்கமாக திருப்பி விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.