கோவை அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுச் சென்றது.
Published on

கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுச் சென்றது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தடாகம், மடத்தூா், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில், வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை அதிகாலையில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை மடத்தூா் பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த நியாயவிலைக் கடையை சேதப்படுத்தியது. பின்னா், அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுவிட்டுச் சென்றது.

மேலும், அங்கிருந்து ராமநாதபுரம் பகுதி வழியாகச் சென்ற அந்த யானை அப்பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திவிட்டு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள், காட்டுப் பன்றிகள் அடிக்கடி நுழைந்து பொருள்களையும், விவசாயப் பயிா்களையும் சேதப்படுத்தி வருவதால் வனத் துறையினா் அதை அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com