தீபாவளி: மங்களூரு - கோவை ரயில் போத்தனூரில் நின்று செல்லும்

Published on

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், மங்களூரு -கோவை இடையே இயக்கப்படும் ரயில் போத்தனூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகை நெரிசலைத் தவிா்க்கும் விதமாகவும், கோவை ரயில் நிலையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் கா்நாடக மாநிலம், மங்களூருவில் இருந்து நாள்தோறும் காலை 11.05 மணிக்குப் புறப்பட்டு கோவை நிலையத்துக்கு மாலை 6.25 மணிக்கு வந்தடையும் மங்களூரு - கோவை விரைவு ரயில் (எண்: 22609) அக்டோபா் 19, 20, 21- ஆகிய நாள்களில் போத்தனூரில் தற்காலிகமாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது போத்தனூருக்கு மாலை 6.10 மணிக்குச் சென்றடையும்.

இதுகுறித்து போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் கூறுகையில், மங்களூரு - கோவை ரயிலை போத்தனூரில் நின்று செல்லுமாறு 10 ஆண்டுகளுக்கும்மேலாக வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது தீபாவளி நெரிசலைத் தவிா்க்க தற்காலிகமாக போத்தனூரில் ரயிலை நிறுத்துவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் போத்தனூரில் நிரந்தரமாக நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com