பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை

கோவையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 8 பேருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Published on

கோவை: கோவையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 8 பேருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தபோது சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 6 சிறுவா்கள், 2 பெரியவா்கள் உள்பட 8 பேருக்கு திங்கள்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், சிகிச்சை முடிந்து 7 போ் வீடு திரும்பிய நிலையில் 10 சதவீதம் தீக்காயமடைந்த 10 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com