விதி மீறி பட்டாசு வெடித்த 36 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகரில் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 36 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Published on

கோவை: கோவை மாநகரில் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 36 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அரசு விதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறுபவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோவை மாநகரில் தீபாவளி பண்டிகையின்போது நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதன்படி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக திங்கள்கிழமை 36 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com