கோயம்புத்தூர்
வால்பாறை அருகே யானை தாக்கி ஒருவா் காயம்
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி ஒருவா் காயமடைந்தாா்.
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி ஒருவா் காயமடைந்தாா்.
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வனச் சரகம், காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்திகுமாா் (37). இவா் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு
வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் குட்டியுடன் 6 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதில் ஒரு யானை மூா்த்திகுமாரை தாக்கியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
