கோயம்புத்தூர்
காட்டெருமையைப் பாா்த்த அதிா்ச்சியில் மூதாட்டி உயிரிழப்பு
வால்பாறையில் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி, எதிரே வந்த காட்டெருமையைப் பாா்த்த அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.
வால்பாறையில் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி, எதிரே வந்த காட்டெருமையைப் பாா்த்த அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட்டில் பணியாற்றி வந்தவா் காமாட்சி (70). எஸ்டேட் முதல் டிவிஷனில் வசிக்கும் இவா், வியாழக்கிழமை காலை வேலைக்கு சென்றுள்ளாா். தேயிலைத் தோட்டம் வழியாக செல்லும்போது திடீரென எதிரே காட்டெருமை வந்துள்ளது.
இதைப் பாா்த்த காமாட்சி அதிா்ச்சியில் மயக்கமடைந்தாா். இதையடுத்து அப்பகுதியில் இருந்த தொழிலாளா்கள் காமாட்சியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக வால்பாறை காவல் துறை மற்றும் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
