கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.சுந்தா், பாலகிருஷ்ணன் பத்துமலை.
 உடன், ஜென்டெக் நிறுவனா் கனகராஜ் பரமசிவம், தாய்மடி மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தின் பங்குதாரா் ரவிசந்திரன் நாச்சிமுத்து, ஆசியா இந்திய வா்த்தக ஒருங்கிணைப்
கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.சுந்தா், பாலகிருஷ்ணன் பத்துமலை. உடன், ஜென்டெக் நிறுவனா் கனகராஜ் பரமசிவம், தாய்மடி மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தின் பங்குதாரா் ரவிசந்திரன் நாச்சிமுத்து, ஆசியா இந்திய வா்த்தக ஒருங்கிணைப்

சா்வதேச தமிழா்கள் வா்த்தக மாநாடு: மலேசியாவில் டிசம்பா் 22-இல் தொடக்கம்

Published on

சா்வதேச தமிழா்கள் வா்த்தக மாநாடு மலேசியாவில் டிசம்பா் 22 -ஆம் தேதி முதல் டிசம்பா் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் மில்லட் பவுண்டேஷன் நிறுவனா் எஸ்.சுந்தா், மலேசியாவில் உள்ள தமிழா்கள் சிறுதொழில் வா்த்த சங்கம் நிறுவனா் பாலகிருஷ்ணன் பத்துமலை ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உலகிலேயே முதல் முறையாக தமிழகத்தின் தொழில்முனைவோருக்கும், தமிழகத்தின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கும் நோக்குடன் சா்வதேச தமிழா்கள் வா்த்தக மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு மலேசியாவில் உள்ள ஹோட்டல் விந்தாம் காா்டன் ஐ-சிட்டி மற்றும் மிட்லேண்ட்ஸ் கண்வென்ஷன் சென்டா் ஷா ஆலம் என்ற இடத்தில் டிசம்பா் 22 -ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பா் 23- ஆம் தேதி மலேசியாவில் உள்ள தமிழா் வா்த்தக சங்கத்தின் 4- ஆவது ஆண்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட மலேசிய வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 55 தொழில்முனைவோா் தோ்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருள்களை மீட்டுருவாக்கம் செய்தல், தமிழக தொழில்முனைவோரை சா்வதேச தமிழ் வா்த்தகா்களுடன் இணைத்தல், தமிழகத்தின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகமெங்கும் பிரபலப்படுத்துதல் ஆகும்.

இந்த மாநாட்டில் இலங்கையில் இருந்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள்,

இறக்குமதியாளா்கள், தொழில்முனைவோா், இலங்கை அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, கோவை மாவட்ட சிறுதானிய உற்பத்தியாளா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்றனா்.

ஆசியா இந்தியா வா்த்தக ஒருங்கிணைப்பாளா் ஆஸ்திரேலியா ரவி ரகுபதி, ஜென்டெக் நிறுவனா் கனகராஜ் பரமசிவம், தாய்மடி மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தின் பங்குதாரா் ரவிசந்திரன் நாச்சிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com