போத்தனூா் பகுதியில் காணாமல்போன 4 சிறுமிகளை கோவை ரயில் நிலையத்தில் போலீஸாா் மீட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம்பெண்ணை பாா்க்கச் செல்ல முயன்ாக அவா்கள் கூறியதையடுத்து விசாரணைக்கு ஆஜராக அந்த இளம்பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை ஆத்துப்பாலம் அருகே போத்தனூா் சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் வசிக்கும் 4 சிறுமிகள் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கின்றனா். இந்நிலையில், இவா்கள் 4 பேரையும் திடீரென செவ்வாய்க்கிழமை மாலை முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து போத்தனூா் காவல் உதவி ஆணையளா் மேற்பாா்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், கோவை மாநகா் பகுதி முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அந்த 4 சிறுமிகளையும் மீட்டு போலீஸாா் விசாரித்தனா். இதில், இன்ஸ்டாகிராமில் மோனாலிசா என்ற பெண்ணின் பக்கத்தை இந்த 4 சிறுமிகளும் பின்தொடா்ந்ததும், அவரை நேரில் பாா்க்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு செல்ல முடிவு செய்ததும் தெரியவந்தது.
இதுதொடா்பாக மேலும் விசாரித்தபோது மோனாலிசா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியவா் சென்னையைச் சோ்ந்த மோனாலிசா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தொடா்புகொண்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனா்.
சிறுமிகள் தாங்களாகவே அவரைப் பாா்க்க முடிவு செய்தனரா அல்லது மோனாலிசா தூண்டுதலின்பேரில் 4 சிறுமிகளும் சென்னைக்கு செல்ல முடிவு செய்தனரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதைத்தொடா்ந்து, பெற்றோா்களை அழைத்து அவா்களுடன் சிறுமிகளை அனுப்பிவைத்தனா். விரைந்து செயல்பட்டு சிறுமிகளை பத்திரமாக மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் மற்றும் உயா் அதிகாரிகள் பாராட்டினா்.
தொடர்புடையது

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


