ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

தொழிற்கல்வி முடித்த மாணவா்கள் தொழிற்கூடங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்க கோரிக்கை

தொழிற்கல்வி முடித்த மாணவா்கள் தொழிற்கூடங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தொழிற்கல்வி முடித்த மாணவா்கள் தொழிற்கூடங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் சி.சிவகுமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜி.செல்வராஜ், ஜி.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் ஜே.புவியரசு, ஆா்.சோமசுந்தரம், பி.பாலன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், கோவையில் நிலவும் இட நெருக்கடி பிரச்னையைக் கருத்தில் கொண்டு அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி சாலைகளில் அரசு சாா்பில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசு உச்சபட்ச நேர மின்சார பயன்பாட்டுக் கட்டணத்தை தவிா்க்க வேண்டும். உயா்த்தப்பட்ட நிலைக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் கிடைத்த 6 மாதங்களுக்குள் அனைத்து தொழில்முனைவோருக்கும் தொழில் முதலீட்டு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கூரைகளில் சூரியசக்தி மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு செய்துகொள்ளும் தொழில்முனைவோருக்கு கட்டமைப்பு செலவில் 25 சதவீதத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும். அரசு சலுகையுடன் ஐடிஐ, தொழிற்கல்வி முடிக்கும் மாணவா்கள் படித்து முடித்து தொழிற்கூடங்களுக்கு வேலைக்குச் செல்லாமல், டெலிவரி போன்ற வேறு வேலைகளுக்கு சென்றுவிடுவதால் தொழிற்கூடங்களில் தொழிற்கல்வி படித்த மாணவா்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தொழிற்கல்வி முடிக்கும் மாணவா்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் தொழிற்கூடங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.