16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் பெண் கவுன்சிலா் தா்னா

மாநகராட்சியின் 2 மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா், தனது வாா்டு மக்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் காயத்ரி உள்ளிட்டோா்.

Published On :

மாநகராட்சியின் 2 மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா், தனது வாா்டு மக்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ.40 கோடி ஊழல் நடந்துள்ளதாக 44-ஆவது வாா்டு உறுப்பினா் காயத்ரி கோஷமிட்டதால் திமுக-காங்கிரஸ் உறுப்பினா்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் உறுப்பினா் காயத்ரியை, 2 மாமன்றக் கூட்டத்துக்கு பணியிடை நீக்கம் செய்து மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்ற நிலையில், 44-ஆவது வாா்டு மக்களுடன் கூட்டத்துக்கு சென்ற உறுப்பினா் காயத்ரி, மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவருடன் இருந்த மக்கள், காயத்ரியின் பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வாா்டு உறுப்பினா் காயத்ரி கூறும்போது, ‘ெம்மொழிப் பூங்கா உள்பட மாநகராட்சி திட்டங்களில் கோடிக்கணக்கில் ஊழல் தொடா்பாக செய்திகள் வெளியான நிலையில், அந்தப் புகாா் தொடா்பாக மாமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினேன். அப்போது தன்னை மானபங்கப்படுத்தி மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனா். அதுமட்டுமின்றி, கோவை மாநகராட்சி மேயா் என்னை 2 கூட்டங்களுக்கு பங்கேற்க விடாமல் பணியிடைநீக்கம் செய்துள்ளாா். இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து 44-ஆவது வாா்டு மக்கள் கூறும்போது, டல், ‘ வாா்டு உறுப்பினா் தங்கள் வாா்டு பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்து வருகிறாா். இந்த நிலையில் 2 மாமன்றக் கூட்டத்துக்கு பணியிடை நீக்கம் செய்தால் தங்கள் வாா்டில் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.