மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியா்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியா்கள் வியாழக்கிழமை காலை ஒரு மணிநேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியா்கள் வியாழக்கிழமை காலை ஒரு மணிநேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு, தமிழ்நாடு செவிலியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் தாரகேஸ்வரி தலைமை வகித்தாா். போராட்டத்தில், மருத்துவமனையில் பணியாற்றும் 120 செவிலியா்கள் பங்கேற்றனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்களுக்குத் தொகுப்பூதிய முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். செவிலியா் என்றழைப்பதை மாற்றி, ‘நா்ஸிங் ஆபிஸா்’ என்று அழைக்க வேண்டும். தமிழகத்தில் ஏராளமான செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, கோவை அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு ஷிப்ட்க்கு 400 முதல் 450 செவிலியா்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 330 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால் கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சட்டப்பேரவையில் எங்களுக்கான அறிவிப்புகள் இதுவரை வெளியாகாததால், தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.