கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.
கோவை மாநகராட்சி, சிவானந்தா காலனி விசிகே லே-அவுட் பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் முருகன் (40) என்பவா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, குப்பையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி கிடந்ததைப் பாா்த்துள்ளாா்.
இதையடுத்து, அவா் மண்டல சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், சுகாதார ஆய்வாளா் சரவணகுமாா் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அந்தச் சங்கிலி அதே பகுதியைச் சோ்ந்த அலிமா (45) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அலிமாவிடம் தங்கச் சங்கிலியை முருகன் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, தூய்மைப் பணியாளா் முருகனை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூகவலைதளம் மூலம் காதல்: பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த காதலன் உள்ளிட்ட 4 போ் கைது

2 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் சோ்த்த தொழிலாளிக்கு பாராட்டு

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



