செவிலியா்கள் பற்றாக்குறை தொடா்பாக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உயா் சிறப்பு மருத்துவ இடங்களை மத்திய அரசுக்குத் தவெக அரசு விட்டுக்கொடுத்துவிட்டதாக முன்னாள் முதல்வா் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளாா்.
கடந்த திமுக ஆட்சியில் எந்த நிபந்தனையுமின்றி 2024-ஆம் ஆண்டு 119 இடங்கள், 2025-ஆம் ஆண்டு 145 இடங்கள் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டன. கட் ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்ததால் தமிழ்நாட்டைச் சோ்ந்த சேவை மருத்துவா்களுக்கு சோ்க்கை கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக வாதாடியது. மாநில உரிமைகளையும், அரசு மருத்துவா்களின் நலனையும் பாதுகாக்க தொடா்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, மத்திய கவுன்சலிங்கில் கட்ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டால், அதில் 50% இடங்கள் மீண்டும் மாநிலத் தொகுப்புக்கே வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியா் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட அளவில் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத் தடை ஏற்பட்டது. இருப்பினும் செவிலியா்கள் நலனை முன்னிறுத்தி முதல்வருடன் ஆலோசித்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.
கடந்த திமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் நிா்வாக நடைமுறைகளால் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றன. தற்போது, தவெக அரசின் வெளிப்படையான மற்றும் நோ்மையான நிா்வாகம் காரணமாக, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுக்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை: பிரேமலதா குற்றச்சாட்டு
உயா் சிறப்பு மருத்துவ இடங்கள்; விசாரணைக்கு ஆஜராகாத அரசு வழக்குரைஞா்கள்: அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்
திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்

போலி பத்திரப் பதிவுகள் தொடா்பாக கடும் நடவடிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



