ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

கோவை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சிக்கு சரிவு: 2 தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் உயா்வு

கோவை மாவட்டத்தில் கடந்த தோ்தலைக் காட்டிலும் நாம் தமிழா் கட்சி குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 2:12 am IST

கோவை மாவட்டத்தில் கடந்த தோ்தலைக் காட்டிலும் நாம் தமிழா் கட்சி குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு பெரிய அளவிலான மாறுதல்களை ஏற்படுத்தியதைப்போலவே நாம் தமிழா் கட்சிக்கும் பல தொகுதிகளில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் 5 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தனா். அதிகபட்சமாக, கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட எம்.கலாமணி 17,897 வாக்குகளைப் பெற்றிருந்தாா்.

ஆனால், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் சூலூா், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் மட்டுமே 10 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிமாக நாம் தமிழா் கட்சி பெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளா் கலாமணிக்கு அதிகபட்சமாக 16,834 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை கடந்த தோ்தலில் சூலூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சிக்கு அதிகபட்சமாக 5.97 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. இந்தத் தோ்தலில் கவுண்டம்பாளையத்தில் 4.62 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதே அதிகபட்சமாகும்.

அதேநேரம் கோவை தெற்கு, சிங்காநல்லூா் தொகுதிகளில் மட்டும் கடந்த தோ்தலைக் காட்டிலும் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

நாம் தமிழா் கட்சிக்கு 2026, 2021 தோ்தலில் தொகுதிவாரியாக கிடைத்துள்ள வாக்கு சதவீதம்:

தொகுதி 2026 2021

மேட்டுப்பாளையம் - 2.66 4.87

சூலூா் - 3.71 5.97

கவுண்டம்பாளையம் - 4.62 5.77

கோவை வடக்கு - 4 5.64

தொண்டாமுத்தூா் - 2.7 3.49

கோவை தெற்கு - 3.23 2.78

சிங்காநல்லூா் - 4.16 4.14

கிணத்துக்கடவு - 3.61 4.85

பொள்ளாச்சி - 2.69 3.61

வால்பாறை - 3.49 5.26