/
வால்பாறை, அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (மே 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.





