மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 3:48 am IST

தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கோவைக்கு வந்தாா். பின்னா், சென்னைக்கு மீண்டும் திரும்புவதற்காக கோபியிலிருந்து அவா் சனிக்கிழமை இரவு கோவைக்கு வந்தாா். அப்போது, அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், விமான நிலையம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவித்துள்ளதாவது:

அமைச்சா் செங்கோட்டையனின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. திங்கள்கிழமை காலை அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.