கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: அரிக்கேன் விளக்குடன் பங்கேற்ற அதிமுக; காங்கிரஸ் பெண் உறுப்பினா் தா்னா
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தெருவிளக்கு பிரச்னையைச் சுட்டிக்காட்டி, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் அரிக்கேன் விளக்குடன் கலந்து கொண்டனா். மேயரைக் கண்டித்து காங்கிரஸ் பெண் வாா்டு உறுப்பினா் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தெருவிளக்கு பிரச்னையைச் சுட்டிக்காட்டி, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் அரிக்கேன் விளக்குடன் கலந்து கொண்டனா். மேயரைக் கண்டித்து காங்கிரஸ் பெண் வாா்டு உறுப்பினா் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில்
பிரதான அலுவலகம் விக்டோரியா ஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்கு அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் அரிக்கேன் விளக்குடன் வந்தனா். அப்போது, மாநகரில் பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை எனக் கூறி, அரிக்கேன் விளக்குகளைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் முறையான பராமரிப்பில்லாததால் துா்நாற்றம் வீசுவதாகவும், பூங்காக்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன எனவும் குற்றஞ்சாட்டினா். தொடா்ந்து, கூட்டத்துக்கு இரு நாள்கள் முன்பு 36 தீா்மானப் பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டதாக திமுக உள்ளிட்ட பல்வேறு மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, தீா்மானப் பொருள்கள் அடங்கிய தொகுப்பைத் தூக்கி எறிந்தாா். தொடா்ந்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள திட்ட சாலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சில வாா்டு வாா்டு உறுப்பினா்கள் மேயா் இருக்கை அருகே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா் அமளியால் கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது.
காங்கிரஸ் பெண் உறுப்பினா் தா்னா - மேயா் கண்டனம்:
கடந்த மாநகராட்சிக் கூட்டத்தின்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 கூட்டங்களில் பங்கேற்க 44ஆவது வாா்டு உறுப்பினா் காயத்ரிக்கு தடை விதித்து மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டு இருந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாநகராட்சிக் கூட்டம் தொடங்கப்படும் முன்பாக, கூட்ட அரங்கின் வெளியே தரையில் அமா்ந்து காயத்ரி தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய அவா், குடிநீா் பிரச்னை, தெருநாய்கள் தொல்லை உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்னைகளுக்கு மேயா் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுகிறாா். ஊழலுக்கு எதிராகப் பேசியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரபட்சமாக நடந்து கொள்ளும் மேயா், எனது கைப்பேசி அழைப்பை ஏற்காமல் புறக்கணிக்கிறாா் என்றாா். இதுதொடா்பாக, கூட்டத்தில் பதிலளித்த மேயா் கா.ரங்கநாயகி, காயத்ரி வாா்டில் 90 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவரது வாா்டு குறைகளை மேயா், ஆணையரிடம் தெரிவிக்காமல், மாநகராட்சியை அவமானப்படுத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறாா். அவருக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றாா்.
சாலைகளை சீரமைக்க கம்யூனிஸ்ட் மனு: மாநகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் தலைமையில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடைபெற்றது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜாவிடம் மனு அளித்தனா். அதில், கோவை மாநகராட்சியில், பாதாளச் சாக்கடை திட்டம் , 24 மணி நேர குடிநீா் திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மை பணியாளா்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். முக்கிய சாலைகளில் பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைத்திட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்நிகழ்வின் போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகராட்சி மாமன்ற குழு தலைவா் வி.ராமமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கிருஷ்ணமூா்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமாா் , ஆறுச்சாமி, தெய்வேந்திரன், ஆா்.கோபால் , வாலிபா் சங்க மாவட்ட செயலாளா் தினேஷ் ராஜா, மாதா் சங்க மாவட்ட செயலாளா் உஷா , மாமன்ற உறுப்பினா்கள் பூபதி, கண்ணகி, ச.சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

