Enable Javscript for better performance
அந்தியூர்: ரூ.30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அந்தியூர்: ரூ.30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

    By dn  |   Published on : 29th September 2012 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானி, செப்.28: அந்தியூர் பகுதியில் ரூ.30 லட்சத்தில் பள்ளிக் கட்டடம், மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
     அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள், எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணீதரனிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, சட்டப் பேரவை உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தை 3 வகுப்பறைகள் கட்ட ஒதுக்கீடு செய்தார்.
     அதேபோல, கொல்லபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர்த் தொட்டி கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டது.இதற்கான பணிகளை எம்எல்ஏ ரமணீதரன் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இ.செல்வராஜ், கோபி கோட்டாட்சியர் பழனிசாமி, வட்டாட்சியர் சுகவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai