சுடச்சுட

  

  ஈரோடு, செப்.28: வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அதிமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
   திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
   இக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அக்.1 முதல் அக்.10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் மத்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பகுதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை பட்டியலில் சேர்க்க அதிமுக நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அக்.7, 14, 21-ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும் என்றார்.
   முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.ரமணீதரன், பி.ஜி.நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், துணைத் தலைவர் மணிமேகலை, மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai