விக்கிப்பீடியா, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி சார்பில் ஈரோட்டில் டிச.13-ல் தமிழ் கணினி பயிலரங்கம்

தமிழ் விக்கிப்பீடியா, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் தமிழ் கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் டிச.13-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ் விக்கிப்பீடியா, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் தமிழ் கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் டிச.13-ம் தேதி நடைபெறுகிறது.

 ஈரோடு பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும், தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் கருத்தில்கொண்டு இப்பயிலரங்கம் நடைபெறுகிறது.

 இக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப. கமலக்கண்ணன் இப்பயிலரங்கில் வரவேற்கிறார். கல்லூரியின் முதல்வர் முனைவர். ச. சரவணபாபு இப்பயிலரங்கத்தை தொடங்கிவைக்கிறார்.

 இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கிறார்.

  இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் 9750933101, 9443517659 ஆகிய செல்போன்களில்  தொடர்பு கொள்ளலாம்.

 இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் வை.கலைச்செல்வி, சி.அங்கயற்கண்ணி, சா.சிவமணி, அர.ஜோதிமணி, ந.மணிகண்டன், இரா.விஸ்வநாதன் ஆகியோர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com