ஈரோட்டை அடுத்த பெருந்துறையில் உள்ள மகாராஜா கலை, அறிவியல் கல்லூரியில் 2014-2015-ஆம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். தாளாளர் தரணீதரன் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரியின் சிறப்பு அதிகாரி சண்முகசுந்தரம், வாழ்த்திப் பேசினார். கல்லூரியின் கல்வி ஆலோசகர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்.
சேலம், ஹெலிக்ஸ் நிறுவனத் தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கிவைத்தார். கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு 2, 3-ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் பூ கொடுத்து வரவேற்றனர்.
விழாவில், மகாராஜா தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் ஆண்டமுத்து, பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
நுண்ணுயிரியல் துறைத் தலைவர் வானதி நன்றி கூறினார்.