அரச்சலூரில் விவசாயத் தோட்டத்தில் முள் எலி பிடிபட்டது.
அரச்சலூர் அருகேயுள்ள நடுப்பாளையம், சிங்கங்காட்டுப் பகுதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் முத்து இளங்கோவின் விவசாயத் தோட்டம் உள்ளது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை பந்து போன்ற உருவம் இருப்பதை அவர் பார்த்துள்ளார். அதை எடுத்துப் பார்த்தபோது அது, முள் எலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முள் எலியை அரச்சலூர் வனத் துறையினரிடம் முத்து இளங்கோ ஒப்படைத்தார். வனத் துறையினர் அந்த முள் எலியை அரச்சலூர் காப்புக் காட்டில் விடுவித்தனர்.