Enable Javscript for better performance
\\\"காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்படும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்படும்'

    Published on : 27th March 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராமல், வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்திவிடுவர் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

    ÷ஈரோடு மாவட்டம் கோபியில் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகக் கூட்டமும், கோபி நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டமும் புதன்கிழமை நடைபெற்றன.

    ÷கூட்டத்தில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல், தனித்து விடப்படவில்லை, நாம் மக்கள் கூட்டணியில் இருந்து வருகிறோம். பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிரிகள் அவரது கட்சிக்குள்ளே உள்ளனர்.

    ÷காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராமல், வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால், தற்போது லட்சக்கணக்கான ஏழை கூலித் தொழிலாளிகள் பயன்பெறும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்திவிடுவர். அதே போல், முதியோருக்கு வழங்கும் உதவித் தொகையும் நிறுத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கு கிடைக்கும் நிதியுதவியும் கிடைக்காது. இந்த மக்களவைத் தேர்தலில் கடினமாக உழைத்து நல்ல ஒரு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான், 2016-ல் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

    ÷கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடியல் சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.வி.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் எல்,முத்துக்குமார்,மாநில துணைத் தலைவர் பி.என்.நல்லசாமி, மாநில பொதுச் செயலர் கள்ளிப்பட்டி பாலு, மூத்த காங்கிரஸ் நிர்வாகி என்.ஆர்.திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai