Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்: 31,672 மாணவ, மாணவியர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்: 31,672 மாணவ, மாணவியர் பங்கேற்பு

    Published on : 27th March 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 31,672 பேர் பங்கேற்றனர்.

    ÷ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாநில கல்வி, ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சா.கண்ணப்பன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

     ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 95 மையங்களில் 31 ஆயிரத்து 672 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ஈரோடு கல்வி மாவட்டத்தில் 46 மையங்கள் மூலமாக 14 ஆயிரத்து 608 மாணவ, மாணவிகளும், கோபி கல்வி மாவட்டத்தில் 49 மையங்கள் மூலமாக 17 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர்.

     தேர்வில் முறைகேடுகளை கண்டுபிடிக்க 80-க்கும் மேற்பட்ட பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

     தேர்வு மையங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்வசதியும் செய்துத் தரப்பட்டுள்ளது என்றார்.

    ÷ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai