Enable Javscript for better performance
முன்னணி நிர்வாகிகள் இல்லாத தேர்தல் பிரசார களம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசார களத்தில் முன்னணி நிர்வாகிகள் இல்லாததால், திமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

     தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது மக்களிடம் நன்கு அறிமுகமான உள்ளூர் தலைவர்கள் தேவை. அப்போதுதான் உள்ளூர் பிரச்னைகளை வியூகம் அமைத்து பிரசாரம் செய்து மக்களிடம் எளிதில் ஆதரவை திரட்ட முடியும். உள்ளூர் முக்கிய பிரமுகர்களையும் எளிதாக அணுக இயலும். ஈரோடு மக்களவைத் தொகுதியில் நன்கு அறிமுகமான முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, திமுக மாநில நெசவாளர் அணி செயலர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன் ஆகியோர் முறையே சேலம், நாமக்கல், பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ÷திமுக மாவட்டச் செயலர் என்.கே.கே.பி.ராஜாவுடன் இவர்கள் மூவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பதால், உள்ளூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தாமல், வெளியூர் தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துவிட்டது கட்சித் தலைமை.

    ÷ஆனால், உள்ளூரில் நன்கு அறிமுகமான இவர்கள் இல்லாததால், திமுகவின் வெற்றி பாதிக்கப்படுமோ என தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai