Enable Javscript for better performance
மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளி: ஹிந்தி தேர்வில் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    ஹிந்தி பிரசார சபா நடத்திய தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

     இப்பள்ளி கடந்த 13 வருடங்களாக ஹிந்தி சபா தேர்வெழுதும் மையமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் உள்பட பிற பள்ளி மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

     இத்தேர்வு முடிவில் இப்பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஹிந்தி ஆசிரியை பி.கனகவல்லி மற்றும் மாணவர்களை, பள்ளித் தாளாளர் பி.எஸ்.செல்லமுத்து, முதல்வர் எஸ்.பழனிசாமி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai