Enable Javscript for better performance
வெங்காயம் விலை வீழ்ச்சி: தாளவாடி விவசாயிகள் கவலை- Dinamani

சுடச்சுட

    

    சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், தாளவாடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ÷சத்தி அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தொட்டகாஜனூர், எரகனள்ளி, பாரதிபுரம், பனகள்ளி, திகினாரை, நெய்தாளபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் 3 மாதங்களுக்கு முன் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது.

    ÷இதுகுறித்து திகினாரை விவசாயி செல்வராஜ் கூறியது: கடந்த 3 மாதங்களுக்கு முன் சின்னவெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் வெங்காயம் பயிரிட்டனர். விதை வெங்காயம் கிலோ ரூ.80-க்கு வாங்கி நடவு செய்து களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட செலவினங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அறுவடை செலவு கிலோ ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் ஆக உள்ளது. தற்போது, வெங்காயம் கிலோ ரூ.9க்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 20 குவிண்டால் மகசூல் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலை கிடைப்பதால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai