Enable Javscript for better performance
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு 13 ரோட்டராக்ட் விருதுகள்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு 13 ரோட்டராக்ட் விருதுகள்

    By ஈரோடு  |   Published on : 17th April 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கு 13 விருதுகள் கிடைத்துள்ளன.

    ஈரோடு மாவட்ட ரோட்டராக்ட் சங்கம் சார்பில் ஈரோடு செங்குந்தர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவில் மாணவர்களின் சிறந்த செயல்கள் மற்றும் சேவைகளை கருத்தில் கொண்டு, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் ரோட்டராக்ட் சங்கத்துக்கு 13 விருதுகள் வழங்கப்பட்டன.

     சீரான நடவடிக்கைகள் மேற்கொண்டமைக்கு சிறந்த விருது,  சிறந்த வளாக கிளப் விருது, சிறந்த செய்தி அறிக்கைக்கான விருது,  சிறந்த கிளப் சேவை விருது,

    சிறந்த மாவட்ட  திட்டச் செயல்பாடுகளுக்கான விருது, சிறந்த ரோட்டராக்ட் வார கொண்டாடத்துக்கான விருது, சிறந்த பொதுத் தொடர்புக்கான விருது, அதிக உறுப்பினர்கள் சேர்த்தமைக்கான விருது, தனிநபர் விருதுகள் (எஸ்.பிரதீபா கெüரி, மூன்றாம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை), சிறந்த தலைமைப் பண்பாளருக்கான விருது (ஜி.நேசகுமார், மூன்றாம் ஆண்டு

    இயந்திரவியல் பொறியியல் துறை), சிறந்த செயலாளருக்கான விருது (ஜி.நேசகுமார், மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் துறை), சிறந்த கல்விச் செயல்திறனுக்கான விருது (எஸ்.செளந்தர்யா,  இரண்டாம் ஆண்டு வேதிப் பொறியியல் துறை), சிறந்த குழு உறுப்பினருக்கான விருது, சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது (உமா மகேஸ்வரி) ஆகிய 13 விருதுகள் வழங்கப்பட்டன.

    விருது பெற்ற ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, சங்க உறுப்பினர்கள் ஆகியோரை கல்லூரித் தலைவர் சிவப்பிரகாசம், செயலர் எஸ்.சிவானந்தன், தாளாளர் ஆர்.மோகன்ராஜ், முதல்வர் ஆ.த.ரவிச்சந்திரன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai