Enable Javscript for better performance
ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்புகளுக்கு 84 பேர் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்புகளுக்கு 84 பேர் போட்டி

    By ஈரோடு  |   Published on : 17th April 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் 9 பதவிகளை பிடிக்க 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் மாவட்ட பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் 2-வது நாளாக வியாழக்கிழமையும் பெறப்பட்டன.

    ஈரோடு பேருந்து நிலையம் அருகே மங்களா அரங்கில் புதன்கிழமை தொடங்கிய முதல் நாளிலேயே மாவட்டப் பொறுப்புகளுக்கு அதிமுகவினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெனிபர் சந்திரன், மில்லர் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.

    மாவட்டச் செயலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், தப்போதைய மாவட்டச் செயலர் ஆர்.என்.கிட்டுச்சாமி எம்.எல்.ஏ. உள்பட 12 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு உள்பட 2 பேர் மாவட்டச் செயலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

     வேட்பு மனுத்தாக்கல் செய்ய வியாழக்கிழமைதான் கடைசி நாள். மாவட்டச் செயலர் பதவிக்கு 14 பேரும், மாவட்ட அவைத் தலைவர் பதவிக்கு 7 பேரும், துணைச் செயலர்கள் பதவிக்கு 26 பேரும், இணைச் செயலர் பதவிக்கு 3 பேரும், பொருளாளர் பதவிக்கு 13 பேரும், பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

     இறுதி நிலவரப்படி மொத்தமுள்ள 9 பதவிகளை பிடிக்க 84 பேர் போட்டியில் உள்ளனர். இவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை மூலம் கட்சிக்கு ரூ.7 லட்சம் நிதி வசூலாகியுள்ளது. வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்யப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai