Enable Javscript for better performance
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நக்ஸல் நடமாட்டம் இல்லை: ஐஜி பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நக்ஸல் நடமாட்டம் இல்லை: ஐஜி பேட்டி

    By ஈரோடு  |   Published on : 17th April 2015 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நக்ஸல் நடமாட்டம் இல்லை என மேற்கு மண்டல ஐஜி சங்கர் தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஐ.ஜி. சங்கர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

    மேற்கு மண்டலங்களுக்குள்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொலை வழக்குகளில் 90 நாள்களுக்குள் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்தான் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. மாவட்டந்தோறும் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. காவல்துறையின் நடவடிக்கை காரணமாக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளன.

    15 முதல் 25 வயது வரை உள்ளவர்களே வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் நக்ஸல் நடமாட்டம் இல்லை. மலைவாழ் மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நட்புறவு வளர வேண்டும் என்பதற்காக மலைவாழ் மக்களை காவல் நண்பர்களாக தேர்வு செய்து வருகிறோம் என்றார்.

    பேட்டியின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai