Enable Javscript for better performance
தூய்மை காவலர்கள் மூலமாக குப்பை அகற்றும் திட்டம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை காவலர்கள் மூலமாக குப்பை அகற்றும் திட்டம்: ஆட்சியர்

    By ஈரோடு  |   Published on : 17th April 2015 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 கிராம ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்கும் குப்பை உரக்குழிகளிலும், மறுசுழற்சி செய்ய இயலாத குப்பைகளை நிலங்கள், நிலத்தடி நீர் மாசு ஏற்படாத வகையில் துப்புரவு சார்ந்த குழிகளிலும் நிரப்பப்படும். மறுசுழற்சி செய்யக் கூடிய கழிவுகளான பிளாஸ்டிக், தாள்கள் போன்றவற்றை ஊராட்சிகள் விற்பனை செய்யும்.

    திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சியில் உள்ள 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் வேலையில் ஈடுபடுத்தப்படுவர்.  இவர்கள் தூய்மைக் காவலர்கள் என்று அழைக்கப்படுவர். இவர்களுக்கு ஊதியம் வழங்கி கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்தது.

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிராம ஊராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்து 3 சக்கர வண்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்கள், உபகரணங்கள், தூய்மை காவலர்களுக்கு மேல் சட்டை, கையுறை, அடையாள அட்டை போன்றவை வழங்கப்படும்.

    இத் திட்டம் குறித்து கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் சுய உதவிக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்படுகிறது.

      இதைத் தொடர்ந்து கிராம அளவில் தூய்மைக் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai