Enable Javscript for better performance
பவானி அருகே பேருந்து-லாரி மோதல்: தொழிலாளர்கள் 40 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி அருகே பேருந்து-லாரி மோதல்: தொழிலாளர்கள் 40 பேர் காயம்

    By பவானி  |   Published on : 17th April 2015 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானி அருகே நூற்பாலையிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகேயுள்ள தனியார் நூற்பாலையிலிருந்து சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, ஒரு பேருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டது. பேருந்தை குமாரபாளையம் மேட்டுக்கடையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கிருஷ்ணன் (24) ஓட்டிச் சென்றார்.

    கர்நாடக மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை தொப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பிரகாஷ் (45) ஓட்டிச் சென்றார்.

    பவானி மேட்டூர் சாலையில் மூன்று சாலைப் பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராமல் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இவ் விபத்தில், இரவுப் பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த குறிச்சி, நத்தமேடு, வெங்கக்கல்மேடு, வாய்க்கால்மேடு, செம்படாபாளையம் உள்பட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த கண்ணாயாள் (50), மாரியாயி

    (50), ரேகா (17), சுகன்யா (20), பெரமாயி (50), துரைசாமி (18), பாப்பாத்தி (45), கிருஷ்ணமூர்த்தி (24), தமிழரசி (48), சின்னம்மாள் (37), ரேவதி (20) உள்பட 40 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்ட பவானி காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், அனைவரும் தனியார் நிறுவன வாகனத்தில் ஏற்றப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

    இவர்களில், பலத்த காயமடைந்த 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். இவ் விபத்தால் சுமார் 2 மணி நேரம் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai