Enable Javscript for better performance
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவருக்கு 10 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவருக்கு 10 ஆண்டு சிறை

    By ஈரோடு  |   Published on : 17th April 2015 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஈரோடு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (42). தொழிலாளியான இவரது மனைவி அலமேலு. நாராயணன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம்.

     இதனால் மனமுடைந்த அலமேலு, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம் 8.11.2012-ல் நடந்தது.

    இது தொடர்பாக பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாராயணனை கைது செய்தனர்.

     இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நாராயணனுக்கு மனைவியை கொடுமைப்படுத்திய பிரிவில் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.500 அபராதம், அபராதத் தொகை கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.

      மேலும் மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.500 அபராதம், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

     இந்தத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai