சுடச்சுட

  

  "விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்துகொள்வது அவசியம்'

  By ஈரோடு  |   Published on : 01st August 2015 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

   ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களிலிருந்து காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைநெல், உரம் போன்றவற்றை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைத்து தடையின்றி விநியோகம் செய்வது, பயிர்க்கடன் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   இக்கூட்டத்தில், ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியதாவது:

   மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களான விதைநெல், உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   மேலும், நடப்பு தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கும், எதிர்வரும் நாள்களில் கீழ்பவானி பாசனப் பகுதிக்கும் ஏற்ற நெல் ரகங்களான ஏ.எஸ்.டி-16, கோ-50, கோ-51, ஏ.டீ.டி-39, கோ-43, ஏ.டீ.டி-38, ஏ.டீ.டி-50, வெள்ளை பொன்னி, கோ-48, கோ-49, ஏ.டீ.டி-44 போன்ற ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

   விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்துதான் விதைக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தங்கள் பகுதி வேளாண்துறை களப்பணியாளர்களை அணுகி பயன்பெறலாம் என்றார்.

   இக்கூட்டத்தில், வேளாண், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai