Enable Javscript for better performance
ஈரோடு மாநகராட்சியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாநகராட்சியில் குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி, மேயர் ப.மல்லிகா பரமசிவம், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, குடியரசு தினத்தின் சிறப்புகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு மாநில அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.

    ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் கண்காட்சியில் சிறந்த உற்பத்திப் பொருள்களை காட்சிக்கு வைத்திருந்த முதல் 3 குழுக்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.

    விழாவில், மாநகராட்சி ஆணையர் பி.மோகன், செயற்பொறியாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல, நகரிலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    ஈரோடு, சூளையில் உள்ள மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரி அலுவலகத்தில் துணை ஆணையர் பாரிவள்ளல் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உதவி ஆணையர், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி தேசியக் கொடியேற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.

    இதில், எலவமலை கூட்டுறவு வங்கித் தலைவர் மகேஷ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பூவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு

    வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai