Enable Javscript for better performance
\\\"கல்வி தான் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கல்வி தான் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம்'

    By பெருந்துறை,  |   Published on : 27th January 2015 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி வழங்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசினார்.

    குடியரசு தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியம், மேட்டுப்புதூர் ஊராட்சி, கினிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பங்கேற்று பேசுகையில்,

    ஊராட்சி நிதி, அரசின் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றின் மூலம் எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை தந்து செய்திடலாம் என கிராம சபைக் கூட்டத்தில் திட்டமிட வேண்டும்.

    ஒருசில பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் தேவையென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிகளில் விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    பயனாளிகள் தாமாக முன்வந்து தனி நபர் கழிப்பறை அமைத்துக் கொள்ள வேண்டும். அரசு இதற்காக ரூ. 12,000 மானியமாக வழங்குகிறது.

    பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி வழங்க வேண்டும். குழந்தைகள் கற்கும் கல்விதான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்றார்.

    மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரமேஷ்குமார், ஈரோடு கோட்டாட்சியர் பி.மேனகா, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலவலர்கள் சார்லஸ் கென்னடி, தமிழ்ச்செல்லவி, மேட்டுப்புதூர் ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai