Enable Javscript for better performance
134 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சம் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழாவையொட்டி, 134 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சத்து 13 ஆயிரத்து 204 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் திங்கள்கிழமை வழங்கினார்.

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர், போலீஸார், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண, சாரணியர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர், அணிவகுப்பு மரியாதை மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ம.ரா.சிபிசக்கரவர்த்தி உடனிருந்தார்.

    தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர். காவல் துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய

    135 பேருக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மொத்தம் 134 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சத்து 13 ஆயிரத்து 204 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் பிரபாகர் வழங்கினார். நிறைவாக பள்ளி மாணவ, மாணவிகளின் குடியரசு தின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் உள்பட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று குழு நடனம் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். கலந்து கொண்டனர்.

    விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், ஈரோடு கோட்டாட்சியர் மேனகா, துணை ஆட்சியர் (பயிற்சி) கீதா பிரியா, அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai