Enable Javscript for better performance
\\\"80 அடி சாலை திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்\\\' - Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் 80 அடி சாலை திட்டப்பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நில மீட்பு இயக்கத் தலைவர் ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ராஜா, திட்டக் குழுத் தலைவர் கு.பூசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், பொதுமக்களின் நன்மை கருதி 80 அடி சாலை திட்டப்பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். சி.எஸ்.ஐ. திருச்சபை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மத பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கக்கூடாது. பங்குனி மாத பொங்கல் திருவிழாவில் கோயில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai