Enable Javscript for better performance
அந்தியூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அந்தியூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

    By DN  |   Published on : 28th January 2015 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்ட காசநோய் தடுப்புத் திட்டம் சார்பில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமில், மருத்துவர் எஸ்.கவிதா காசநோய் பாதிப்பு, அதிலிருந்து விடுபடுவது குறித்தும், சத்தான உணவைத் தேர்வு செய்து உண்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து காசநோயின் அறிகுறிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும், நோய் பாதிப்பைக் குணப்படுத்த தொடர்ந்து 6 மாதம் கூட்டுமருந்து, மாத்திரைகள் நோயாளியின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கப்படுகிறது. தொண்டு

    நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்குப் பின் குணமானோர் மாத்திரைகளை விநியோகிக்கின்றனர். நோயாளி குணமாக குடும்பத்தினர் உரிய ஒத்துழைப்பு வழங்க

    வேண்டும். உரிய சத்துணவை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இம்முகாமில், அத்தாணி, அந்தியூர் பகுதிகளைச் சேர்ந்த 40 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    நோயாளிகளுக்கு அந்தியூர் சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நோய் பாதித்தோருக்கு சத்துணவுகளை வழங்கினர்.

    இதில், அந்தியூர் ரோட்டரி சங்கத் தலைவர் கே.வி.துரைசாமி, முன்னாள் தலைவர் ஏபிஎஸ்.பற்குணன், சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளைத் தலைவர் கே.கார்த்திகேயன்

    உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai