Enable Javscript for better performance
ஈரோடு மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் 55 சதவீதம் நிறைவு: மேயர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் 55 சதவீதம் நிறைவு: மேயர் தகவல்

    By ஈரோடு  |   Published on : 28th January 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம்

    தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை:

     ஈரோடு மாநகராட்சியில் 11.12.2008-ஆம் ஆண்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு, காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர்,

    வீரப்பன்சத்திரம் ஆகிய 4 நகராட்சிகளை ஒருங்கிணைத்து பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 209.22 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

     மொத்தம் 5 கட்டங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக சூரம்பட்டி பகுதியில் ரூ. 59.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 201.56 கி.மீ.

    நீளத்துக்கு கழிவுநீர்க் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 9.59 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்காக ரூ. 26.55 கோடி செலவு

    செய்யப்பட்டுள்ளது.

     2-ஆவது கட்டமாக ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளில் ரூ. 49.90 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமுள்ள 109.54 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர்க் குழாய்

    அமைக்கும் பணியில் 38.49 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதுவரை ரூ.9.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

     3-ஆவது கட்டமாக ரூ. 29.64 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மொத்தமுள்ள 106.51 கி.மீ. நீளத்துக்கு 99.52 கி.மீ. பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதில், 93.44 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

     4-ஆவது கட்டமாக ரூ. 22.53 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமுள்ள 89.23 கி.மீ. நீளத்தில் 66.04 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதில்,

    மொத்தம் 74.02 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.  இதுவரை ரூ. 17.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

     5-ஆவது கட்டமாக ரூ. 23.82 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 20.32 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

    மொத்தம் நடைபெற்றுவரும் 5 கட்டங்களிலும் சேர்த்து 55 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் பணிகள் நிறைவடையும்

    என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai