Enable Javscript for better performance
காகித ஆலைகளை மூடக்கோரி வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பவானிசாகரில் உள்ள காகித ஆலைகளை மூடக்கோரி சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகள் சார்பில், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப்

    பேரணி நடைபெற்றது.

     சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட காகித ஆலைகளின் கழிவு நீர், பவானி ஆற்றில் கலப்பதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் அந்த நீரைப் பயன்படுத்த

    முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

     பவானி ஆற்றின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பொதுமக்களும் பயனடைந்து

    வருகின்றனர்.

     எனவே, காகித ஆலைக் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதால் அந்த ஆலைகளை மூடக்கோரி விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை

    நடத்தி வருகின்றனர்.

     இதன் தொடர்ச்சியாக, பவானி ஆறு குடிநீர் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கமும், விவசாயிகளும் சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணி

    நடத்தினர். எஸ்.ஆர்.டி கார்னரிலிருந்து தொடங்கிய இப்பேரணி கோம்புபள்ளம், தாண்டாம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன்நகர், வடவள்ளி, கஸ்தூரிநகர் வழியாக

    சத்தியமங்கலம் வாரச்சந்தையில் முடிவடைந்தது. இதில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai