Enable Javscript for better performance
குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களுக்கு சோதனைச் சாவடி- Dinamani

சுடச்சுட

    

    குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களுக்கு சோதனைச் சாவடி

    By பெருந்துறை  |   Published on : 28th January 2015 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருந்துறையில், சுங்கச் சாவடியில் சுங்கம் செலுத்துவதை தவிர்க்க குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களை தடை செய்யும் பொருட்டு, சோதனைச்

    சாவடி அமைக்க சுங்கச் சாவடி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

     பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில், ஐவிஆர்சிஎல் நிறுவனம் சுங்கச் சாவடி அமைத்து, சுங்கம் வசூலித்து வருகிறது. சில வாகனங்கள் சுங்கச் சாவடியில் சுங்கம்

    செலுத்துவதை தவிர்க்க, கிராமத்து சாலையில் செல்கின்றன.

     கிராமத்து சாலைகளை வாகனங்கள் பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, கிராம மக்கள் மாட்ட ஆட்சியரிடம்

    புகார் செய்தனர்.

     இதையடுத்து, குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களை தடுக்கும் பொருட்டு, கம்புளியம்பட்டி கிராம சாலையில், விஜய்விகாஸ் பள்ளி அருகில், மாவட்ட நிர்வாகம்

    அனுமதியுடன் ஐ.வி.ஆர்.சி.எல் நிர்வாகம் சோதனைச் சாவடி அமைத்துள்ளது.  சோதனைச் சாவடியை, கடந்து வாகனங்கள் செல்ல முடியாது. ஆகவே, திரும்பி வந்து சுங்கச்

    சாவடி வழியாக, சுங்கம் செலுத்தி விட்டுச் செல்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai