Enable Javscript for better performance
கொள்முதல் நிலையம் திறக்க இடையூறு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு, ஜன. 27:  நெல் கொள்முதல் நிலையம் திறக்க இடையூறு செய்வதாக அதிமுக பிரமுகர் மீது சென்னிமலை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் தலைமையில் பசுவப்பட்டி, எக்காட்டாம்பாளையம்,

    புதுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு:

     பெருந்துறை வட்டத்துக்கு உள்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், புதுப்பாளையம் வருவாய் கிராமங்களுக்கும் மையமான ஒரு இடத்தில் அரசு நெல் கொள்முதல்

    நிலையம் திறக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

     இந்நிலையில், சென்னிமலை - காங்கயம் பிரதான சாலையை ஒட்டியுள்ள வெப்பிலி பிரிவு அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க போதுமான இடவசதியுடன் கூடிய

    ஓர் இடத்தை நுகர்பொருள் வாணிபக் கழகம் தேர்வு செய்துள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று நெல் கொள்முதல் செய்வதற்கான சாக்கு

    மூட்டைகள், எடை போடும் கருவி, நெல் தூற்றும் கருவி உள்ளிட்டவை நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன.

     நெல் அறுவடை நடைபெறவுள்ள நிலையில், இங்கு தொடங்கப்படவுள்ள கொள்முதல் நிலையத்தை திறக்கவிடாமல் சென்னிமலை அதிமுக ஒன்றியச் செயலாளர்

    கோபாலகிருஷ்ணன் இடையூறு செய்து வருகிறார்.

     ஆயக்கட்டுப் பாசன நிலம் இல்லாத புதுப்பாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான அரிசி ஆலை அருகே இந்தக் கொள்முதல் மையத்தை திறக்கவேண்டும் என்று அவர்

    தொடர்ந்து நிர்பந்தம் செய்து வருகிறார்.

     எனவே, இதை தடுத்து நிறுத்தி நுகர்பொருள் வாணிபக் கழகம் தேர்வு செய்த இடத்திலேயே நெல் கொள்முதல் மையம் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    என்று தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "நெல் கொள்முதல் மையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், 3 கிராமங்களுக்கும் மையப்

    பகுதியான இடம் அல்ல. எனவே, மூன்று கிராமங்களுக்கும் மையப் பகுதியில் கொள்முதல் மையம் தொடங்கினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என்பதால் தான்

    காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் மூலமாக அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai