Enable Javscript for better performance
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை  மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை  மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தல்

    By ஈரோடு  |   Published on : 28th January 2015 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர்

    கு.செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து, ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

     2013-ஆம் ஆண்டு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் விவசாயிகளுக்கு சாதகமாக திருத்தம் செய்யப்பட்டது.

    ஆனால், இப்போது மோடி அரசு இச்சட்டத்தில் திருத்தம் செய்து விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களைச் சேர்த்துள்ளனர்.

     அத்துடன், இதை அவசரச் சட்டமாகத் தாக்கல் செய்துள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

    எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி வேளாண் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

     மழை, வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் உடனடியாக நிவாரணம் பெறும் வகையில் அவசரக்கால நிதி ஆணையம் என்னும் புதிய

    அமைப்பை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்றார்.

     இப்பேட்டியின்போது, கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவர் வி.என்.மகுடேஸ்வரன், மாவட்டச் செயலாளர் கே.வி.பழனிசாமி, மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.ராமசாமி

    ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai