Enable Javscript for better performance
பர்கூர் மலைக் கிராமத்தில் இலவச பல் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பர்கூர் மலைக் கிராமத்தில் இலவச பல் சிகிச்சை முகாம்

    By பவானி  |   Published on : 28th January 2015 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானி, ஜன. 27: பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் சுடர் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்

    பர்கூர் மலைக் கிராமம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமில் பல் மருத்துவர்கள் மகேந்திரன், கணேசன், பரத்குமார், யுவராஜ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பல் நோய் பரிசோதனை மேற்கொண்டு,

    நோய் பாதித்தோருக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகளையும் வழங்கினர்.

    இதில், தட்டக்கரை, ஊசிமலை, துருசனாம்பாளையம், பர்கூர் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மேலும், இம்முகாமில் உறைவிடப் பள்ளி பள்ளி மாணவ, மாணவியருக்குப் பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்குச்

    சீருடைகள், பற்பசை, பிரஷ்கள் வழங்கப்பட்டன.  இதில், பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.பரணி, செயலர் எம்.விஜயன், நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணன்,

    ராஜா, திருக்குமரன், சுடர் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பி.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai