Enable Javscript for better performance
மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: திருமகன் ஈ.வெ.ரா. - Dinamani

சுடச்சுட

    

    மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: திருமகன் ஈ.வெ.ரா.

    By ஈரோடு  |   Published on : 28th January 2015 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு, ஜன. 27: மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று பெரியாரின் கொள்ளு பேரனும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா. கூறினார்.

     ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

     காங்கிரஸ், இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் நடுநிலைக் கொள்கையையே இப்போது வரை கடைப்பிடித்து வருகிறது. அணுசக்தி

    கொள்கை, பொருளாதாரக் கொள்கை உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் - பாஜக இடையே ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது போலத் தோன்றினாலும், ஏழை,

    எளிய மக்களைப் பாதுகாக்கும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், தெருவோர வியாபாரிகளைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன.

    தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் முன் விவசாயிகள், பொதுமக்களிடம் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள்

    கேட்கும் இழப்பீட்டுத் தொகையை அளித்த பின்னரே அத்திட்டத்தை தொடங்க வேண்டும்.

     கர்நாடகத்தில் மேகதாது, கேரளத்தில் பாம்பாறு ஆகியவற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் பேசி சுமூகத் தீர்வு காண

    வேண்டும்.

      காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. அதனால் தான் விலைவாசி தொடர்ந்து

    ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது மோடி அரசுக்குச் சாதகமாக உள்ளது.

     மோடி அரசு பதவியேற்றபின், பிற மாநிலங்கள் மட்டுமன்றி திராவிடக் கட்சிகள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழகத்தில் கூட மத ரீதியான பிரச்னைகளைத் தூண்டிவிட்டு

    அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்.

     தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.

     இப்பேட்டியின்போது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai